×

அரசும் தூர்வாருவதில்லை; மக்கள் செய்யவும் அனுமதிப்பதில்லை: பியூஷ் மானுஷ், சுற்றுச்சூழல் ஆர்வலர்

தமிழக அரசாங்கத்திற்கு தண்ணீர் பிரச்னை புரிஞ்சு இருக்கிறதா, புரியலையான்னு தெரியல. இப்போ சேலத்தில் வனத்துறையே மரத்தை வெட்டி கொண்டு இருக்கிறது. இந்த பக்கம் குடிமராமத்து பெயரில் ஏரியில் நாசம் செய்து  கொண்டிருக்கின்றனர். களிமண் எந்த ஏரியிலும் இல்லை.  தமிழக அரசு இப்போது தண்ணீர் பிரச்னையை புரிந்து கொண்டு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் எதுவும் இல்லை. வெள்ளம், வறட்சி மாறிமாறி வருகிறது. வெள்ளத்தை தடுக்க, தண்ணீரை சேமிக்கவும் இல்லை;  வறட்சி காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை. இது தான் அரசின் செயல்பாடா என்று கேட்கத்தோன்றுகிறது. இயற்கைக்கு மரியாதை கொடுத்தால், அவற்றை இனியாவது காப்பாற்றினால், மரங்களை வளர்த்தால் தமிழகத்தில் எதிர்காலத்தில் வாழ முடியும். இல்லையென்றால், தமிழகத்தில் வாழ்க்கை இல்லை; பாலைவனமாகி விடும். இதை முதலில்  நாம் புரிந்து கொள்ள வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை அரசு ஒழுங்காக வைத்திருந்தார்கள் என்றால் இப்போது தண்ணீர் பற்றாக்குறை வந்திருக்காது. எல்லா ஓடை, ஏரி, குளத்தில் கழிவு நீர் தான் திறந்து விட்டுள்ளனர். இந்த குளம் ஏரியை சுற்றி சீமை  கருவேல மரங்கள் தான் முளைத்துள்ளது. இதையெல்லாம் சரி செய்யாமல் அரசு மக்கள் நலன் பற்றி பேசி கொண்டு இருப்பது வேதனையாக உள்ளது.
பள்ளப்பட்டி ஏரியை தூர்வார நாங்கள் பல மாதங்களாக கேட்டு வருகிறோம். ஆனால், எங்களுக்கு தூர்வார அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், அரசு ஒரு சில  ஏரிகளை மாறி,மாறி தூர்வாரி வருகின்றனர். கம்மாபட்டி ஏரியை நாங்கள் தான்  சரி செய்தோம். இப்போது, ஸ்மார்ட் சிட்டி எனக்கூறி நாங்கள் எடுத்து கொள்கிறோம் என்று அரசு கூறி விட்டது. இப்போது மக்கள் அந்த ஏரியை சுத்தம் செய்யும் பணிக்கு கூட அனுமதி தர  அதிகாரிகள்  மறுக்கின்றனர்.

 அரசாங்கத்திடம் ஒரு ஏரியை தத்தெடுத்து அதை சரி செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அது, ஒரு பெரிய போராட்டம் தான். பொதுமக்கள் சிலரும் ஏரி, குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்ட கூடாது. அவர்கள், சரியாக இருந்தால்  அரசிடம் கேள்வி கேட்க முடியும். ஆனால், ஒரு சிலர் தங்களின் சுயலாபத்திற்கு ஏரி குளங்களை ஆக்கிரமித்துள்ளனர். அவர்களால் அரசு ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிப்பு எனக் கூறி ஏரிகளை தூர்வாராமல் அப்படியே விட்டு விடுகின்றனர்.  முதலில் நீர்நிலைகளை பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருக்க வேண்டும். மக்கள் வீடு கட்டும் போது 4 மரங்களாவது நட்டு இருக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை வெட்டி ரோடு போட்டு  வருகின்றனர். இப்படி மக்கள், அரசாங்கம் சேர்ந்து தவறு செய்து வருகின்றனர்.  ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் பாதுகாக்க வேண்டும்;  ஏரி, ஓடைக்கும் தண்ணீர் போக வேண்டும். மலை உச்சியில் கனிம கொள்ளை இல்லாமல்  பாதுகாக்க வேண்டும்.  கோயில் திருவிழா, கும்பாபிஷேகத்திற்கு செலவு செய்ய முன்வரும் மக்கள் ஏரி, குளங்களை தூர்வார செலவு செய்ய மறுக்கின்றனர். மழை பெய்யாமல் இருக்கிறதே என்ற எண்ணத்தில் மரங்கள் நடலாம் என்ற பேச்சு கூட மக்கள் மத்தியில்  இல்லை. மக்கள் நமது இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களது மத்தியில் ஏற்பட வேண்டும். அப்போது தான் தண்ணீர் பிரச்னை ஏற்படாது. ஆனால் மக்களுக்கு ேபாதிய விழிப்புணர்வு இல்லை.கோயில் திருவிழா, கும்பாபிஷேகத்திற்கு செலவு செய்ய முன்வரும் மக்கள் ஏரி, குளங்களை தூர்வார செலவு செய்ய மறுக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : kingdom ,Puish Manush, Environmental Activist , kingdom,shattered, permit, Puish Manush,
× RELATED இது உங்கள் ராம ராஜ்ஜியம்: ஆம் ஆத்மி இணையதளம் தொடக்கம்